/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_253.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் வந்து செல்ல கல்லூரி நிர்வாகமே பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் வழக்கம்போல்கல்லூரி முடிந்து மாடப்பள்ளி பகுதி சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தி செல்போனில் குத்து பாடல்களை போட்டு நடனம் ஆடினர். பேருந்தை அங்கிருந்து செல்ல விடாமல் நிறுத்தி நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் இதனை கண்டும் காணாமல் சென்றனர்.
சிலர் இதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பரவ செய்துள்ளார்கள். இதனைப்பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியாகி, இந்த இளைஞர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)