Youth arrested for threatening public for Instagram likes

திருச்சியில் எட்டரை சிவன் கோவில் பகுதியில் ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நின்றுள்ளார். அப்போது கடைவீதிக்கு காய்கறி வாங்க வந்த பெண் ஒருவர் இது குறித்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

அதன்பேரில் திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கு அரிவாளுடன் சுற்றித்திரிந்த முகேஷ் ராஜை கைது செய்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Advertisment

மேலும், திருச்சி மாவட்ட காவல்துறையின் சமூக வலைத்தள கண்காணிப்பு குழுவின் மூலம்கண்காணித்தபோது, சோமரசம்பேட்டை எட்டரை கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் முகேஷ்ராஜ் (21) என்பவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் கத்தி, வாள் போன்ற அபாயகரமான ஆயுதங்களைக் கையில் வைத்துள்ளவாறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான வசனங்களுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.