Skip to main content

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Youth arrested in Pocso for misbehaving with 9-year-old girl

 

குடிபோதையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகே உள்ள மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர், மரத்தை வைத்து உபகரணங்கள் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ். 23 வயதான இவர், 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு அங்குள்ள தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான ராஜேஷ், சரியாக வேலைக்கு செல்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதையறிந்த ராஜேஷின் தந்தை, “டேய் எதுக்குடா சரியா வேலைக்கு போக மாட்றா. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னோட வாழ்க்கைதான் நாசமா போகும்” என ராஜேஷை பலமுறை கண்டித்துள்ளனர்.

 

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ராஜேஷ், தொடர்ந்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். அதே சமயம், ராஜேஷ் மதுபோதையில் இருக்கும்போதெல்லாம் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பெண்களை கிண்டல் செய்வார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷின் பக்கத்து வீட்டில் 9 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ராஜேஷ் அந்த சிறுமியை கிண்டல் செய்வது வழக்கம். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த ராஜேஷ் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியும் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

இதையடுத்து, அச்சிறுமியிடம் தனது சபல புத்தியை காட்டிய ராஜேஷ், விளையாட்டு பொம்மைகள் தருவதாகக் கூறி, அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, “இதை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர், என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி, ராஜேஷ் தன்னிடம் செய்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளனர்.

 

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை; சினிமாவை மிஞ்சும் சம்பவம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Four arrested for stealing from vehicles on Chennai-Bangalore National Highway

நெடுஞ்சாலை என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. அந்தப்படத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளில் பொருட்களை திருடும் கும்பல்கள் எப்படி திருடுகிறது என்பது குறித்து காட்சிப்படுத்தியிருப்பார்கள். களத்தில் செயல்படும் திருட்டு கும்பல் அதைவிட வித்தியாசமாக லாரிகளில் கொள்ளையடித்து வருகின்றனர். அதாவது பெண்களை தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வாகனங்களை நிறுத்தச்செய்து கொள்ளையடிப்பது, ஓட்டுநர்கள் வாகனங்களை ஓய்வுக்காக நிறுத்திவைக்கும்போது திருடுவது போன்று பல வகைகளில் திருடுகின்றனர். அப்படியொரு கும்பலை தான் பிடித்துள்ளது காவல்துறை. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இனோவா கார் ஒன்றை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த காரில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் சென்னை போரூர் பகுதியை சேர்ந்த டேவிட் சோபி, பரமசிவம், அருண், முத்து என தெரியவந்தது.

Four arrested for stealing from vehicles on Chennai-Bangalore National Highway

இவர்கள் சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளில் ஏறி அதிலுள்ள பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிப்பது தங்கள் தொழில் எனக்கூறியுள்ளனர். அதிகமாக திருடமாட்டோம், வழக்கு பதிவாகாத அளவுக்கு பொருட்களை திருடுவோம், குறைவாகத்தானே திருடு போயிருக்கிறது என அவர்கள் புகார் தரமாட்டார்கள் எனச்சொல்லியுள்ளனர்.

அவர்கள் தந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்த ஒரு இனோவா கார், திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரி, திருடி வைத்திருந்த கோல்டு வின்னர் ஆயில் பாக்கெட் பெட்டிகள், எலக்ட்ரிக் பொருட்கள், ராணுவ வீரர்களின் உடை உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். அதன் மதிப்பு பல லட்சம் என்கின்றனர் போலீஸார். பறிமுதல் செய்த பொருள்களோடு வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவர் கைது

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Prohibited tobacco seller arrested

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கச்சேரி வீதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், கடை உரிமையாளரான கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.