Skip to main content

குதிரை கடித்து சிகிச்சையில் இருக்கும் இளைஞர்கள்

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Young people who are being treated for horse bites!

 

விழுப்புரம் நகரில் உள்ள கா.குப்பம் அருகே கொய்யம் பாக்கம் எனும் பகுதியில் ஒரு அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பக்தர்கள், நேர்த்திக் கடனாக குதிரைகளை வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் குதிரைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்தக் குதிரைகள் அப்பகுதியில் சுற்றி திரிந்துவருகின்றன. 

 

இந்நிலையில் நேற்று ஒரு குதிரை பொயப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், பத்மநாபன் எனும் இரு இளைஞர்களை கடித்துள்ளது. இதில், அந்த இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களையும் குதிரை கடித்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்