Skip to main content

தங்கை முறையில் உள்ள பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் - 'உயிர்களைப் பறித்த முறையற்ற காதல்'

 

A young man who tied a thali to a girl who was in a sisterhood-'Improper love that took lives'


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் துரைக்கண்ணு (36). கட்டட வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் மகள் பவித்ரா(21). பட்டதாரியான இவரை துரைக்கண்ணு காதலித்துள்ளார். இருவரும் அண்ணன் - தங்கை உறவு. இந்த உறவை மீறிய காதலை பெற்றவர்களும் மற்றவர்களும் கண்டிக்க, பவித்ரா ஒதுங்கத் தொடங்கியுள்ளார். ஆனால் துரைக்கண்ணுவால் பவித்ராவை மறக்க முடியவில்லை. அண்ணன் - தங்கை, சித்தப்பா - மகள் என்ற உறவுகளைச் சொல்லி பிரிக்க நினைக்கிறார்கள் அதனால் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று துரைக்கண்ணு சொன்னபோது பவித்ரா மறுத்துள்ளார்.

 

இந்நிலையில் பவித்ராவிற்கு உடல்நலமின்றி வீட்டில் இருந்ததால், தன்னை சந்திக்கவில்லை பேசவில்லை என்று மன வேதனையும் கோபமும் கொண்ட துரைக்கண்ணு., சனிக்கிழமை பவித்ரா வீட்டில் அனைவரும் கூலி வேலைக்குச் சென்ற பிறகு தனியாக இருந்த பவித்ராவை தேடிப் போய் தாலி கட்ட அதற்கு பவித்ரா மறுப்பு சொன்னபோது, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் துரைக்கண்ணு.

 

A young man who tied a thali to a girl who was in a sisterhood-'Improper love that took lives'

 

கூலி வேலைக்குச் சென்ற பவித்ரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். கதறி அழுத உறவினர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் சொல்ல டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ரா உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், துரைக்கண்ணு உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முறை தவறிய காதலால் இரு உயிர்கள் பறிபோனதை நினைத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !