The young man who passed away because he could not recover from alcoholism

திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் இளையராஜா. பெற்றோர் இல்லாததால் தனியாக வசித்துவந்த இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று (15.09.2021) மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாவிற்கு வீடியோ ஒன்றை பதிவுசெய்து அனுப்பிவைத்துள்ளார். அதில், “குடி பழக்கத்தை விட முடியவில்லை. என் மரணத்திற்கு காரணம் என் குடிப்பழக்கம். என்னைப் போல் யாரும் குடிகாரர்களாக மாறிவிடாதீர்கள்.

Advertisment

குடிப்பழக்கம் ஒருவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றும் என்று நான் தெரிந்துகொண்டேன். குடிப் பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் கடைசியாக மதுவில் விஷம் கலந்து குடிக்கிறேன். என்னைப்போல் இருப்பவர்கள் உயிருடன் இருக்கக்கூடாது. எனவே எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று பதிவிட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். வீடியோ பதிவைப் பார்த்த அவரது உறவினர்கள், இளையராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுப் பழக்கத்தை விட முடியாததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.