/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1002_111.jpg)
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுந்தர் வீதியைச் சேர்ந்தவர் அம்சவேல் (47). இவரது மகன் பரமசிவம் (21). எலக்ட்ரீஷியன். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள சுள்ளிக்காடு எனும் பகுதிக்குச்சென்ற பரமசிவம் வயிற்று வலி காரணமாக விஷம் அருந்தி விட்டதாகத்தனது தந்தைக்கு ஃபோன் மூலமாகத்தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாகத்தந்தை அம்சவேல் அங்கு சென்று அவரை மீட்டு, அருகில் உள்ள அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி பெற்ற பின் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)