/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_273.jpg)
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் மகன் மணிகண்டன். பொறியியல் பட்டதாரியான இவர் படித்துமுடித்துவிட்டு தனது சகோதரருடன் சேர்ந்து விவசாயம் செய்துவருகிறார். இதனிடையே மணிகண்டன் நொல்லை கோடீஸ்வரன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மணிகண்டன், நேற்று முன்தினம்(14.10.2024) இரவு தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் வேறு ஒருவருடன் பேசிவருவது மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த மணிகண்டன் அங்கிருந்தபடியே அவரது தாயாரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தனது காதலி தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான மணிகண்டன் காதலியின் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)