Skip to main content

கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Young Girl Passes away near Tambaram Station

 

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் ஸ்வேதா(21), தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியன் படித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஸ்வேதா படித்து வரும் தாம்பரம் தனியார் கல்லூரி அருகே அவரும் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவரும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஸ்வேதா மருத்துவமனையிலேயே இறந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

ஸ்வேதாவுக்கும் ராமச்சந்திரனுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறதா? காதல் விவகாரம் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் மறைமலைநகர் பகுதியில் தங்கியிருப்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்; பாஜக நிர்வாகிக்கு சம்மன்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Summons to BJP executive in case Rs 4 crore in Chennai to Nellai train

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த  06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Next Story

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை ரத்து!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Chennai Beach - Tambaram Train Service Cancelled!

 

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (29.11.2023) முதல் டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2023) வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மார்க்கத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (29.11.2023) முதல் டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2023) வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மார்க்கத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.