Skip to main content

வழிமறித்த போலீஸ்... விபத்தில் சிக்கிய இளம்பெண்... வேதனையில் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

சென்னையில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஒரு இளம்பெண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை செங்குன்றத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பிரியதர்ஷினி. இவர் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, காவல் துறையினர் வாகன சோதனைக்காக அவரை நிறுத்தினர். அப்போது நிலைதடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த லாரி அவரது வாகனத்தின் மீது மோதியதால் பிரியதர்ஷினிக்கு காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பெற்று வந்தார். 
 

girl



 

girl



இதனையடுத்து, விபத்துக்கு காரணமான போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்குள்ள போலீஸ் பூத் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரது 2 கால்களும் முறிவு ஏற்பட்டுள்ளதால் நடக்க முடியாமல், மனவேதனையுடன் காணப்பட்டார். இருப்பினும் அவரது காலில் அதிக வலி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரியதர்ஷினி இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்