Skip to main content

வாலிபருடனான பிரச்சனையில் அவரின் மனைவியை பழி வாங்கிய இளைஞர்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

young boy posted his wife's number online take revenge

 

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர். ஆனால் அவர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராஜா தனது சொந்த ஊரில் உள்ள டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்தார். அப்போது அதே கடைக்கு வந்த இளைஞருடன் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டனர். இந்தப் பிரச்சனையை மனதுக்குள் வைத்திருந்த ராஜா, அந்த வாலிபரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த வாலிபருக்கு திருமணமானதை அடுத்து அவர் கோவையில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

 

அவருடைய மனைவி, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதை அறிந்த ராஜா, அந்த வாலிபரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக ராஜா, அந்த வாலிபரின் மனைவியின் செல்போன் நம்பரை ஆன்லைனில் பதிவிட்டு, அதில் தொடர்பு கொண்டால் உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், தனது மனைவியுடன் சென்று கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட நபர் ராஜா தான் என்பதைக் கண்டுபிடித்தனர்.  

 

அதன்பிறகு, போலீசிடம் இருந்து தப்பிக்க நினைத்த ராஜாவை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ராஜா தற்போது கோவையில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சாதாரண டீக்கடை பிரச்சனைக்கு பழித்தீர்ப்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த சம்பவம் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.