Skip to main content

யோகா தினத்தில் தமிழ்நாடு ஆளுநர் செய்த யோகா (படங்கள்)

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9 ஆவது ஆண்டு சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

 

பல்வேறு முக்கியத் தலைவர்களும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, ராஜ்நாத் சிங், அனுராக் தாக்கூர் போன்றோர் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 

 

அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தினத்தினை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவியுடன் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் யோகா செய்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனையில் மாநில அரசு பங்கேற்கவில்லை; ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
The State Government did not participate in the South District Flood Impacts Consultation; Governor's House Allegation

கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் படிப்படியாக சீரடைய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் நடத்திய வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டை தமிழக ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ரயில்வே துறை உயர் அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசும் அதன் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. மழை பாதிப்பால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது, மாநில அரசு அழைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை செய்ய மத்திய அரசு துறையில் தயாராக உள்ளதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கூட்டத்தில் பங்கேற்ற சில மத்திய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மீட்புகளை மேற்கொள்வது தொடர்பாக தெளிவற்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்தனர் என்றும் ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டி உள்ளது.