publive-image

Advertisment

சென்னை கிண்டியில் இன்று (10/10/2021) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் 'மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற வணிக பிரதியை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 2008- ஆம் ஆண்டு 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் சென்னை பாதிப்பை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல். அதை நோக்கி தான் எல்லாத் திட்டங்களும் உள்ளன. முதலமைச்சராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன். உலகில் அதிகம் வாசிக்கக்கூடிய நாளிதழாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' விளங்குகிறது.

publive-image

Advertisment

தி.மு.க. ஆட்சியமைத்த கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்வு அடைந்திருக்கிறது. இந்தியாவிலேயே ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். அனைத்து தொழில்களும் தொடங்குவதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அரசை பாராட்டி எழுத வேண்டும் என்று கட்டளை போடவில்லை; விமர்சனங்கள் செய்யுங்கள்; அதனை சரி செய்கிறோம். தமிழ்நாடு தொழிற்துறை குறித்த செய்திகள் அதிகம் இடம் பெற வேண்டும் என்று ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்". இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.