Skip to main content

வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலாளி தற்கொலை; இருவர் கைது

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

A worker who took money on interest committed incident; Two arrested

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வட்டிக்கு பணம் வாங்கி திருப்பிச் செலுத்த காலதாமதம் ஆன நிலையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண வசூலுக்குச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆலங்குடி அருகே உள்ள சூத்தியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது தொழிலாளி ஒருவர் புதுக்கோட்டை விடுதி ஆசைத்தம்பி என்பவரிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். பல மாதங்களாக பணத்தையும் வட்டியும் திருப்பிக் கொடுக்காத நிலையில் பணம் வாங்கிய தொழிலாளி வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் ஊழியர்கள் இருவர் கையோடு அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல் பணம் வாங்க ஜாமின் போட்டவரையும் அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர்.

 

இதனால் விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்தவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக இருவரை கைது செய்துள்ளனர். மேலும் பைனான்ஸ் முதலாளி மீது வழக்குப்பதிவு செய்ய கோரியுள்ளனர் உறவினர்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்' - புதுக்கோட்டை மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

'Do not go to the sea until further notice'-Pudhukottai fishermen warned

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதேபோல் டிசம்பர்.1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மோசமான வானிலையால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்