அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில் போதையற்ற, அமைதியான தமிழகத்தை உருவாக்க திருவண்ணாமலையிலிருந்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமையில் ஒரு குழுவும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாழ்ந்த வடலூரில் இருந்து மாநில செயலாளர் சுகந்தி தலைமையில் ஒரு குழுவும் என இரு முனைகளில் இருந்தும் இரு குழுக்கள் சென்னை கோட்டை நோக்கி இன்று 25ம் தேதி நடைபயணம் துவக்குகியுள்ளனர். இந்த நடைபயணம் நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற உள்ளது.
பின்னர் இரு முனைகளில் இருந்தும் சுமார் 200 கிலோமீட்டர் தூரமுள்ள சென்னை கோட்டையில் பயணம் நிறைவுபெற்று. அங்கே நடைபயணத்தின்நோக்கத்திற்கான கருத்துவிளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. மாதர் சங்கத்தினரின் இந்த அமைதி நடைபயண நோக்கம் வெற்றி பெற கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் உட்பட பல்வேறு இயக்கத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாதர் சங்கத்தினர் மது இல்லா தமிழகத்தை மாற்றிட எடுத்த இந்த முயற்சியை வடலூர் நகர மக்கள் பெரிதும் வரவேற்று வாழ்த்துகிறார்கள்.