Skip to main content

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் கொலை..!

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Woman passes away police investigation in erode

 

ஈரோடு மாவட்டம், பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பவானி அருகே உள்ளது லட்சுமி நகர் பகுதி. இங்கு கே.கே. நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஓய்வுபெற்ற தனியார் கல்லூரி பேராசிரியர். இவரின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியே வாழ்கின்றனர். கணேசன் தனது மனைவி வளர்மதியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கணேசன் 20ந் தேதி காலையில் அருகில் உள்ள பவானி நகரத்திற்கு சென்றுள்ளார். 

 

இதனால் வீட்டில் வளர்மதி மட்டும் தனியாக இருந்துள்ளார். கணவன் வெளியே போன சிறிது நேரத்தில் அவரது வீட்டிலிருந்து அழுகுரலும் கதறல் சத்தமும் கேட்டுள்ளது.  அந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு போய் பார்த்தபோது, வளர்மதி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இதன் பின்னர் அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. மற்றும் போலீசார் உயிரிழந்த வளர்மதியின் உடலில் இருந்த கைரேகையை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 

 

இதன் பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வளர்மதி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க நகைக்காக யாரோ மர்ம நபர்கள் இப்படிப்பட்ட கொலையை செய்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் இப்படி ஒரு பெண் கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்