/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trichy-fever.jpg)
திருச்சியில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த பெண்மணியான கனகவல்லி (வயது 38) என்பவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கனகவல்லி உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் உயிரிழந்த கனகவல்லிக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிந்து என்ற பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)