Skip to main content

வயிற்று வலியால் பூச்சி மருந்தைக் குடித்த பெண் உயிரிழப்பு!

 

salem

 

வயிற்று வலியால் பெண் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

 

சேலம் மாவட்டம் தும்பலம் கிராமத்தைச் சோ்ந்தவர் கலையரசி (20).  இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முருகன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதோடு தன்னுடைய மகளுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால், குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கலையரசியை தாய் சாந்தி கலையரசியின் கணவரின் வீட்டிற்கு பேருந்தில் அனுப்பி வைத்தார். ஆனால் கலையரசி கணவர் வீட்டிற்கு செல்லாமல் சமயபுரத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்ததால் அவர் பூச்சிமருந்தை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !