திருச்சி, கீழப்புதூர் பகுதியில் உள்ள குருவிக்காரன் தெருவில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இறக்கைகள் வெட்டப்பட்டு பச்சைக்கிளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 500க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகளையும், 150க்கும் மேற்பட்ட முனியாஸ் என்ற பறவையும் பறிமுதல் செய்தனர். தமிழக வனத்துறை சடை சட்டம் 1972ன் படி இந்த பறவைகள், விற்னைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் சட்டத்தை மீறி பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் உள்ளிட்ட பறவைகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அவை இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள பச்சைக்கிளிகளில் இறக்கை வெட்டப்பட்ட கிளிகள் இறக்கை வளரும் வரை பராமரிக்கப்பட்டு அதன்பிறகு வனப்பகுதிகளில் கொண்டு சென்று விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.