Skip to main content

பேருந்து கட்டணம் உயர்வா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

minister

 

கரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதேபோல் ஊரடங்கிற்கு முன்னதாக தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''தமிழ்நாடு அரசின் 19,201 பேருந்துகளில் 15,627 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. இலவசப் பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு 60 சதவீதம் மகளிர் அரசுப் பேருந்தில் பயணிக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்