Skip to main content

கணவனின் சந்தேக பார்வையால் விபரீத முடிவு எடுத்த மனைவி... அதிர்ந்துபோன ஊர் மக்கள்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

The wife who made a perverse decision due to her husband's suspicious vision ... the people of the village were shocked

 

கடையம் அருகேயுள்ள செக்கடியூர் பகுதியைச் சேர்ந்த தங்கையாவின் மகன் சுரேஷ் (35). அடிப்படையில் கூலித் தொழிலாளியான இவருக்கும் தென்காசி மங்கம்மாள் பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜ் மகள் கவுரி கனகா (30) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கீர்த்தனு (5) என்ற மகனும் இலக்கியா (3) என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் சென்னை மற்றும் கேரளா சென்று கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்தார். அவர் வீடு திரும்புகிறபோதெல்லாம் தன் மனைவி கவுரி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அவருடன் தகராறு செய்துவந்திருக்கிறார்.

 

சந்தேகப் பேர்வழியான தன் கணவன் தன்னிடம் அடிக்கடி தகராறு செய்தது கண்டு வேதனை அடைந்த அவர், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ் மீது புகார் அளித்திருக்கிறார். ஆனால் அவர்கள் கணவன் மனைவி இருவரையும் வரவழைத்து, சமாதானம் பேசி அனுப்பியுள்ளனர். வீடு வந்த பிறகும் சந்தேகம் காரணமாக சுரேஷ் தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்ததால் வெறுத்துப்போன கவுரி கனகா, குழந்தைகளுடன் தென்காசியிலுள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த 5 மாதங்களாக கவுரி கனகா தனது தாய் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.

 

அந்த சமயம் சுரேஷ் தன் மனைவி கவுரி கனகாவைப் பற்றி அவரது தாய் வீட்டின் பக்கத்தில் இருப்பவர் மூலமாகக் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், உறவினர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் செக்கடியூருக்குத் திரும்ப அழைத்து வந்திருக்கிறார் சுரேஷ். வீடு திரும்பிய பிறகும் நடந்தவைகளை மனதில் வைத்துக்கொண்ட சுரேஷ், மனைவியின் நடத்தை குறித்து மீண்டும் பேசியிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்குள் நேற்று (14.07.2021) காலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 

இதன் பின் சுரேஷ், மதியம் அதே பகுதியைச் சேர்ந்த தன் உறவினரின் இறுதி நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார். கணவரின் தன்மீதான சந்தேக நடவடிக்கைகளால் மிகவும் மனமுடைந்துபோன கவுரி கனகா, தனது வீட்டைப் பூட்டிவிட்டு, தன் இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றியவர், தனது மீதும் ஊற்றி தீவைத்து, தனது இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து கைகளால் கட்டிக்கொண்டு படுக்கையில் விழுந்திருக்கிறார். சுரேஷ் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டு பதறிப்போன உறவினர் மற்றும் பொது மக்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கவுரி கனகாவும் குழந்தைகளும் உடல் கருகி இறந்துகிடந்தனர்.

 

இதைக் கண்டு கதறி அழுத உறவினர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உள்ளிட்ட போலீசார் மூவர் சடலங்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து தடயவியல் துறை இணை இயக்குநர் ஆனந்தியும் வரவழைக்கப்பட, அவரது டீம் அங்குள்ள தடயங்களையும் சேகரித்தனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால் தென்காசி ஆர்.டி.ஓ. ராமச்சந்திரன் விசாரணை நடத்திவருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியைக் கனத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே நடந்த அந்த பரிதாப சோக சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ந்துபோயுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.