Skip to main content

“என்னோடு வாழமாட்டீங்களா?” - கணவன் மீதான கோபத்தில் மனைவி தற்கொலை!

 

Wife lost their life because she was separated from her husband

 

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் வெள்ளூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரியை காதலித்து 6 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம்  முரண்பட்டு கலிங்கப்பட்டியில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார் முனீஸ்வரி.     

 

கடந்த 15-ஆம் தேதி கணவர் கருப்பசாமியை அவர் வேலை பார்க்கும்  நாகலாபுரம் பட்டாசு ஆலையில் சந்தித்த முனீஸ்வரி,  “என்னை வைத்து  வாழப் போகின்றீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு கருப்பசாமி “பெரியோர்களை வைத்துப் பேசி முடிவு செய்து வாழ்வோம்.” எனக் கூறியிருக்கிறார். முனீஸ்வரியோ  “என்னுடன் வாழ்வீர்களா?  இல்லையென்றால் நான் சாகத்தான் வேண்டும்..” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அன்று மாலை கலிங்கப்பட்டியில் உள்ள தன் அம்மா வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்ட முனீஸ்வரியை  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்து போனார். தனது மகளின் இறப்பு குறித்து நத்தம்பட்டி காவல்நிலையத்தில் முனீஸ்வரியின் தந்தை கருப்பையா புகாரளித்த நிலையில் வழக்கு பதிவாகியிருக்கிறது.  

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !