Skip to main content

பலமுறை கொலை முயற்சி; கணவன் கண்முன்னே கடத்தப்பட்ட காதல் மனைவி!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

wife kidnapped in front of her husband

 

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் வினீத் தன் பள்ளி பருவத்தில் இருந்தே அதே பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவரை காதலித்து வந்துள்ளார். பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்க தொடங்கினாலும் திருமணம் செய்து கொள்வதற்கு சரியான நேரம் வரும்வரை காத்திருந்தார் இளைஞர்  வினீத். தற்போது  தனது எஞ்சினியரிங் படிப்பை முடித்த வினீத் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் வினீத் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க, அப்போது வினீத் தான் கிருத்திகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லி தன் வீட்டில் அவரின் காதலுக்கு ஒப்புதலும் வாங்கியுள்ளார். ஆனால் இவர்களின் காதலை வினீத்தின் காதலியான கிருத்திகாவின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வினீத் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி தன் காதலி கிருத்திகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார். மேலும் பெண் வீட்டார் தரப்பில் இருந்து தங்களுக்கு ஏதாவது ஆபத்த்து நேரலாம் என்று நினைத்த வினீத் - கிருத்திகா தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குற்றாலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள்.

 

இதற்கிடையே கடந்த புதன்கிழமை தென்காசி குத்துக்கல்வலசை எனும் இடத்தில் தங்கள் உறவினர் வீட்டில் இருந்த வினீத் கிருத்திகா தம்பதியை கிருத்திகாவின் பெற்றோர் சில அடியாட்கள் கொண்ட கும்பலுடன் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். வினீத்தின் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த கும்பல் வினீத்தின் கண் முன்னே அவரது மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றுள்ளது. அப்படி கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லும் அந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கிருத்திகாவின் தந்தையான நவீன் பட்டேல் மற்றும் சில அடியாட்கள் கும்பல் கிருத்திகாவை கடத்தியதோடு அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வினீத், தனது மனைவி கிருத்திகாவை மீட்டு தரக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் கிருத்திகா தன்னுடன் மட்டுமே இருக்க விரும்புவதாக அவர் எழுதிய கடிதத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். 

 

கிருத்திகாவின் பெற்றோர் இதற்கு முன்பே இதுபோல் கிருத்திகாவின் மீது பலமுறை கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் அவரை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்பதே வினீத்தின் கோரிக்கையாக இருக்கிறது. பட்ட பகலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கணவனின் வெறிச்செயல்; கர்ப்பிணிப் பெண்ணிற்கு கத்திகுத்து!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Husband stabs pregnant wife

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், வீரராகவவலசை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். ஓட்டுனரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் ஆன நிலையில் தற்போது சுபாஷினி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் வழக்கம்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சுபாஷினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இருவீட்டுப் பெற்றோரும் காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மது போதையில் வீட்டிற்கு வந்த கணவன் விஜயகுமார் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷினியின் வயிறு கழுத்து கை என நான்கு இடங்களில் குத்தியதில் படுகாயமடைந்தார். 

அவரின் அலறலைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மது போதையில் இருந்த கணவன் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

'காமராஜர் திறந்து வைத்த பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள்'-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
nn

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நாளை (10/06/2024) திறக்கப்பட இருக்கின்றன. இதற்கு முன்பாகவே, பள்ளிகளை திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தவேண்டும்; பள்ளியில் தூய்மையான குடிநீரை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வி துறை வழங்கியுள்ளது.

nn


இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளியில் கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் சமூக விரோதிகள் நடமாட்டத்தால் மது பாட்டில்கள் ஆங்காகே கிடப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி 1966 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அப்பள்ளி கட்டடங்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மேஜைகள் உள்ளிட்டவை முழுவதுமாக சேதமடைந்து பள்ளிக்கூட வளாகத்தின் ஒரு அறையில் கொட்டப்பட்டுள்ளது. அதேபோல் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்ததால் ஆங்காங்கே காலி மது பாட்டில்களும் கிடக்கிறது. உடனடியாக பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும், சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.