Skip to main content

கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை; விசாரணையில் வெளிவந்த உண்மை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

 Wife commits due to husband scolding; online rummy tragedy

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் கணவன் திட்டியதாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் என்பவர் தனது மனைவி வந்தனாவுடன் வசித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தனர்.

 

ஓரிரு தினங்கள் மனைவி வந்தனா கணவன் வீட்டில் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் கணவன், மனைவி இருவரும் இணைந்தே சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியில் முதலில் பணத்தை வென்று வந்த நிலையில் சமீப காலங்களில் பணத்தை இழந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் அஜய்குமார் ஆன்லைன் ரம்மியை கைவிடும்படி பலமுறை தனது மனைவியிடம் கூறியும் வந்தனா கைவிடாமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். மிகச் சமீபத்தில் ரூ.70000 பணத்தை இழந்ததாகத் தெரிகிறது.

 

பணத்தை இழந்ததால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. வந்தனாவை அஜய்குமார் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த வந்தனா கணவன் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.