/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/458_7.jpg)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் கணவன் திட்டியதாகதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் என்பவர் தனது மனைவி வந்தனாவுடன் வசித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தனர்.
ஓரிரு தினங்கள் மனைவி வந்தனா கணவன் வீட்டில் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில்கணவன், மனைவி இருவரும் இணைந்தேசில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியில் முதலில் பணத்தை வென்று வந்த நிலையில் சமீப காலங்களில் பணத்தைஇழந்து வந்ததாகத்தெரிகிறது. இதனால் அஜய்குமார் ஆன்லைன் ரம்மியை கைவிடும்படி பலமுறை தனது மனைவியிடம் கூறியும் வந்தனா கைவிடாமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். மிகச் சமீபத்தில் ரூ.70000 பணத்தை இழந்ததாகத்தெரிகிறது.
பணத்தை இழந்ததால் கணவன் மனைவிக்குஇடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. வந்தனாவை அஜய்குமார் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த வந்தனா கணவன் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)