
மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் ஸ்பேஸ் என்ற சமூக வலைத்தளத்தில் பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "அரசியல் என்பது முழு நேர வேலையாக இருக்கக் கூடாது என்று காந்தி கூறியிருக்கிறார். உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற தமது எண்ணத்துக்கு படிப்பு உதவியாக இருக்கும். ஐந்தாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய அமெரிக்கா சென்றுள்ளதாக தி.மு.க.வினர் அவதூறு பரப்புரையைச் செய்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டை கலிபோர்னியா போன்று வளர்த்தெடுப்பதில் தனது கவனம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.