Skip to main content

“திமுக என்.எல்.சிக்கு நிலத்தை எடுத்துக் கொடுக்கத் துடிப்பது ஏன்?” - அன்புமணி ராமதாஸ் கேள்வி  

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 "Why is DMK trying to give land to NLC?" - Dear Ramadoss

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு நிலைப்பாட்டில் இருந்த திமுக தற்போது என்.எல்.சிக்கு ஏன் நிலத்தை எடுத்து கொடுக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்காக காவல்துறையை வைத்து அப்புறப்படுத்தும் நிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டார்கள். திடீரென ஏன் தமிழ்நாடு அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு நிலைப்பாட்டில் இருந்த திமுக இன்று ஏன் இவ்வளவு தீவிரமாக மக்களை, விவசாயிகளை விரட்டியடித்து விலை நிலங்களை கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும். என்எல்சி என்பது மத்திய அரசின் நிர்வாகம். பொதுவாக திமுகவும் பாஜகவும் நேர் எதிராக இருக்கக்கூடிய கட்சிகள். அப்படியிருக்க மத்திய அரசு நிர்வாகத்திற்காக ஏன் இப்படி நிலத்தை எடுத்துக் கொடுக்கிறது திமுக. என்எல்சி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்று அமைச்சர் சொல்லுகிறார். ஏன் உங்களிடம் மின்சாரம் தயாரிக்க வேறு நிறுவனங்கள் இல்லையா? 2030க்குள் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நீரேற்று மூலமாக, சூரிய ஒளி மூலமாக, காற்றாலை மூலமாக அதிகப்படுத்துவோம் என்று ஆட்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் 1000 மெகாவாட்டுக்காக ஒட்டுமொத்த மாவட்டத்தை அழிக்க வேண்டுமா?

 

உலகம் முழுவதும் சூழ்நிலை மாற்றங்களால், காலநிலை மாற்றத்தால் நிலக்கரி சம்பந்தமான அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது. இங்கு ஏன் நீங்கள் திறக்கிறீர்கள். நேற்று கொண்ட கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்களுடைய கேள்வி? இந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆட்சியராக இல்லாமல் என்எல்சி தரகர் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்களுக்குத்தான் நீங்கள் மாவட்ட ஆட்சியர் என்எல்சி நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிடையாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மணல் கொள்ளையைத் தடுத்த கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி” - அன்புமணி கண்டனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 Anbumani Ramadoss emphasized wants to crack down on sand mafia

தமிழகத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர்  கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது. மணல் சரக்குந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த மகிழுந்து சேதம் அடைந்த நிலையில்,  மணல் சரக்குந்தை பின்னோக்கி இயக்கி வந்து  மீண்டும் மோத மணல் கடத்தல் கும்பல் முயன்றுள்ளது. மகிழுந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச்  செயல்பட்டு, மகிழுந்தை இடதுபுறமாகத் திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாகத் தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு  எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி  சமுக அமைதிக்கும் மிகப்பெரிய  ஆபத்து ஆகும்.

மணல் மாஃபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தக் கிராம நிர்வாக அலுவலரை வெட்ட  கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை  மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது,  வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டுப் பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதைப் படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும்  கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டினார்கள். முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கொள்கையைக் கைவிட்ட பா.ம.க.! 

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Abandoned the policy of the PMK
 பாமக வேட்பாளர் சி.அன்புமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடுகிறது. பாமகவின் வேட்பாளராக அன்புமணியை நிறுத்தியிருக்கிறார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி. வேட்பாளராக அறிவுக்கப்பட்டுள்ள அன்புமணி, ஏற்கெனவே  2016-இல்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டவர்.

2016-இல் தனித்து பாமக களம் கண்ட போது போட்டியிட்ட அன்புமணி,  சுமார் 41,428 வாக்குகளைப் பெற்றார். பதிவான வாக்குகளில் இது 23.19 சதவீதமாகும். அந்த அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தல்களில் பாமக போட்டியிடுவதில்லை என்பதும், ஒரு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டால் அந்தச் சமயத்தில் அந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றதோ அந்தக் கட்சிக்கே வாய்ப்பு தருவதற்கேற்ப தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்பதும் பாமகவில் எடுக்கப்பட்ட முடிவு. அதுவே பாமகவின் கொள்கையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், தனது கொள்கையை கைவிட்டுவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை பாமக தலைமை எடுத்துள்ளது. இந்த முடிவு பாமகவிலேயே சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.

இது குறித்து நம்மிடம்  பேசிய பாமகவினர், “நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாமக ஜெயிக்கவில்லை. தர்மபுரியில் நிச்சயம் வெற்றி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் தோல்வியைத் தழுவியது பாமக. வட தமிழகத்தில் பாமகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதையும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பார்கெய்ன் பவரை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. மற்றபடி கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒரே கட்சி பாமக தான்” என்கிறார்கள்.