தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது...
மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை அரசியல் நோக்கத்திற்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும், இருந்தாலும் மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோர் ஆளுநரை அவமதிப்பதாகவும் இது கிரிமினல் குற்றம் எனவும் தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்ய முடியும் என்ற போதிலும் தான் அதை தவிர்த்து விட்டதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் போரட்டங்கள் நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தான் கருதவில்லை என்றும். அமைதியான வழியில் போரடுவதற்கான உரிமை ஜனநாயகத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
பேராரசிரியார் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அதிகாரி சந்தானம் குழுவின் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்படும். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"தமிழக அரசின் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக தனக்கு எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை, தமிழகத்தில் நிலையான அரசு தொடர்வதையே நான் விரும்புகிறேன். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விவரம் தனக்கு முழுமையாக தெரியும், அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை" என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.