பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று பெரியாரிய ஆதரவாளர்கள் சார்பில் சீமான் வீட்டை முற்றுகையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களும் அங்கு குவிந்துள்ளனர்.
இந்நிலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்த பேசுகையில், ''திருமுருகன் காந்தி போன்றோருக்கு என்னுடைய தம்பி, தங்கைகளே பதில் சொல்வார்கள். சங்ககிரி ராஜ்குமார் யாரு?அவர் ஏன் போட்டோவை வெட்டி ஒட்ட வேண்டும்.அவர் முதலில் என்னை நேரில் பார்த்துள்ளனரா? பேசியுள்ளாரா? அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வாங்க . வெங்காயம்ன்னு படம் எடுத்தாரு அதனால் வெங்காயங்களுக்கு ஆதரவாக பேசுறார். இன்னொருத்தர் நான் எடிட் செய்தேன் என்கிறார். எத்தனை பேருதாண்டா எடிட் பண்ணீங்க. காமெடி பண்ணிக்கொண்டு அலையாதீங்க. 15 வருஷமா எங்க இருந்த? அந்தப்படம் ஒரு பத்திரிகையில் வந்தபோது அப்போவே சொல்ல வேண்டியது தான? பெரியார்மேல் அடி விழுந்ததும் பிரபாகரன் பொய் என வருகிறீர்கள். மோதுவது என்றுதான் ஆகிவிட்டதே. பார்த்துவிடுவோம் பெரியாரா? பிரபாகரனா என்று மோதி விட வேண்டியது தானே? மெயின் பிராஞ்சே பேசாமல் இருக்கும் போது பெட்டிக்கடை காரர்கள் நீங்க ஏன் துள்ளி வருகிறீர்கள். அவதூறை தவிர வேறு ஏதாவது இருக்கா? குளத்தூர் மணி என்பவர் நான் மதிக்கத்தக்க பெரியவர். அவர் சொல்கிறார் நாம் தமிழர் கட்சி பெயரை வாங்க துக்ளக் சோவையும் குருமூர்த்தியையும் கூட்டி சென்று சிவந்தி ஆதித்தனாரிடம் வாங்கி வந்தேன் என சொல்கிறார். வாயை திறந்தால் இந்த திராவிட திருட்டு புளுகர்கள் என்ன பேசிருக்கீங்க. பெரியார் உங்களுக்கு தேவை என்றால் உங்கள் பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணுங்க. எங்களுக்கு தேவை இல்லை. அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர்''என்றார்.