கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் உடைந்து விபத்துக்குள்ளானது.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே கங்கையம்மன் கோயில் வைகாசி மாத திருவிழாவையொட்டி, வளழக்குப்பம் கிராமத்தில் ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது. ராட்டினத்தில் அச்சாணி உடைந்ததால்தரையில் விழும் நிலைக்கு போன போது அதில் இருந்த 20 பேர் கூச்சலிட்டனர். எனினும், அருகில் இருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு, அவர்களைக் காப்பாற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து, ராட்டினத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.