டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று காலைசென்னை புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என். எஸ் கடற்படைத் தளத்துக்கு சென்று, அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கிற்கு காரில்வந்தார்.
தற்பொழுது திட்டங்களை தொடங்கி வைக்க நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி காரில் பயணம் மேற்கொண்டநிலையில்அரங்கிற்கு செல்லும் பொழுது சாலையில் திரண்டிருந்தமக்களைப் பார்த்து கையசைத்தார்.அதேபோல் அவர் செல்லும் வழியில் அதிமுக சார்பிலும், பாஜக சார்பிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது.