hj

Advertisment

hj

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகளின் போராட்டத்தில் போது பாஜகவைச் சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றினர். இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களைத் திருப்பப் பெறக் கோரியும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் அவர்களின் தலைமையில் சத்தியாகிரகம் போராட்டம் அண்ணா நகரில் இன்று மாலை நடைபெற்றது.

Advertisment

இதில் பேசிய ரஞ்சன் குமார், " இந்த சம்பவத்துக்குக் காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா பதவி நீக்கப்பட வேண்டும். இந்த படுகொலை குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை மரியாதை இல்லாமல் பேசி வருகிறார், இது மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் தொடர்ந்து எங்கள் தலைமையைப் பற்றி தவறாகப் பேசினால் அவரை அடித்து ஓட விட விடுவோம்" என்றார். இந்த கூட்டத்தில் அண்ணா நகர் சர்க்கிள் தலைவர்கள் முரளிகிருஷ்ணா, ஏழுமலை, சூளைமேடு ரீயாஸ், பாஸ்கரன், வசந்தராஜ், அப்துல் காதர் (எ) சேக் அவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் ரங்கபாஷியம், வழக்கறிஞர் அணுகுண்டு ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.