'' We need to suppress the poisonous voices that want to separate '' - DTV Dinakaran

Advertisment

தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமகுரல்களை மத்திய, மாநில அரசுகள் அடக்க வேண்டும் என அமமுகவின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பாஜக எடுத்திருக்கும் கொங்குநாடு என்பது தொடர்பான பேச்சுகள் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ''சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறு போட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.சாதியை முன்வைத்து தமிழ்நாட்டை கூறு போட்டால் அது தமிழகத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்'' என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், ''தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தற்போது நடைமுறை சாத்தியம் இல்லை. அது அவசியமும்மில்லை. எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகமானால் நிர்வாக ரீதியாக தமிழ்நாடு பிரிக்கப்படலாம். ஆனால் சாதியஅடிப்படையிலோ, அரசியல் ரீதியாகவோ தமிழ்நாடு பிரிக்கப் படக்கூடாது'' என தெரிவித்துள்ளார்.