Skip to main content

“வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை முன்னுதாரணமாக கொண்டு பாஜக அரசை வீழ்த்த வேண்டும்” - அசோக் தாவ்லே

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

"We must overthrow the BJP government by setting an example of historic victory" - Ashok Thawle

 

வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்ட வெற்றியை முன்னுதாரணமாக கொண்டு பாஜக அரசை வீழ்த்த வேண்டும்"  என்று திருவாரூரில் நடந்த விவசாயிகள் பாராட்டு கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அசோக் தாவ்லே பேசினார். 

 

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏறக்குறை ஒரு வருடமாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி, அதனை திரும்ப பெற வைத்த விவசாயிகளுக்கு பாராட்டு பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. 

 

"We must overthrow the BJP government by setting an example of historic victory" - Ashok Thawle

 

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு ஊர்வலமாக வந்தனர்.

 

கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் ஐவர் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த அசோக் தாவ்லே பேசுகையில், "பி.ஜே.பி. அரசு நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும்; வருவாய் அளிக்கக் கூடிய அரசு நிறுவனங்களையும் விற்று வருகிறது. நாட்டை விற்பனை செய்து வரும் பாஜக அரசை எதிர்த்து போராடி வருகிறோம். தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும் உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்ட வெற்றியை முன்னுதாரணமாக கொண்டு பாஜக அரசை வீழ்த்த வேண்டும்"  என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

 வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Farmers are happy as Veeranam lake is full

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெருகிறது. 

இதனால் இந்த வட்டப் பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழ் அணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும்.

இந்த ஏரியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் கடும் வெயில் காரணமாகவும் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரி வறண்டது. சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிடும் வகையில் தமிழக அரசு சிறப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அன்றே கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 

வெள்ளிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பியது. கீழனையில் இருந்து ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி  விஎன்எஸ்எஸ்  வடிகால் மதகு வழியாக விநாடிக்கு150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 9 அடி ஆழம் உள்ள கீழணையில் 4.1 அடி வரை தண்ணீர் உள்ளது. ஏரி நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பாசனத்திற்கும் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

விவசாய பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு; கலைஞர் விழாவில் 200 விவசாயிகளுக்குப் பண்ணைக்கருவிகள்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Farm implements for farmers at kalaignar centenary function

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள 200 விவசாயிகளுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 84, 85-வது மாத ஊதியத்திலிருந்து 2,10,000 ரூபாய் மதிப்பீட்டில் பண்ணைக்கருவிகள், தார்பாய்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் கலந்துகொண்டார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது உரையில் “விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைஞர்  ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளின் நலனைக் காத்தவர் கலைஞர். அதுபோல்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை செய்துள்ளார். தற்போது வரவிருக்கும் விவசாய பட்ஜெட்டை, விவசாய பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.   

Farm implements for farmers at kalaignar centenary function

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி.  “வாடிய  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர்களின் கூற்றுப்படி பயிர்களை வாடாமல் பார்த்துக்கொள்ளும் விவசாயப் பெருமக்களாகிய தங்கள்  அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்”எனப் பேசினார்.