apollo

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி ஏதும் எங்களது மருத்துவமனையில் இல்லை என அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியும், அவரது வாரிசாக அறிவிக்க கோரியும், பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா..? என்பதை தெரிவிக்க அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரியோ, திசு மாதிரியோ தங்களிடம் கிடையாது என அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.