
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34,000 கன அடியிலிருந்து 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தற்போது அணையிலிருந்து நீர் திறப்பு 300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு உயர்வால் வைகை அணைக்கு நீர்வரத்து 2,354 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றப்படுவதால் வைகை அணையில் நீர் இருப்பு 5,656 மி.கன அடியாக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)