Skip to main content

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: மாற்று ஏற்பாடாக குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் பணி தீவிரம்

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 


தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடையைக் காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 17 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

w

 

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் ஒன்றாக, சென்னை ஐகோர்ட்டும், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

இந்த உத்தரவை ஏற்று, நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 1 லிட்டர் அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு, விற்பனைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

முதல் கட்டமாக, இந்த தடை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

"அண்ணாமலை 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டியிருக்காருன்னு போட்டு கொடுத்ததே அவரு கூட இருக்கிறவருதான்..." - குடியாத்தம் குமரன்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

த

 

உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட நகர்வாக அண்ணாமலையின் வாட்ச் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும் படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் டீக்கடையில் இந்த வாட்சை பற்றி எப்போது மக்கள் பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனிடம் நாம் கேட்டபோது, " இந்த வாட்ச் விவகாரத்தை முதலில் யார் பேசினார்கள் என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை என்ன வாட்ச் அணிந்திருக்கிறார், அது எவ்வளவு விலை என்று யாருக்குத் தெரியும். அண்ணாமலை கூட இருந்தவர்கள் கூறினால்தானே இதன் உண்மை நமக்குத் தெரியவரும். இந்த வாட்ச் விஷயத்தில் அண்ணாமலை கூட இருந்த ஒருவர்தான் இதைப் பெரிதுபடுத்த வேண்டும் என்று அதனை வெளியே கசியவிட்டிருக்க வேண்டும். அதையும் தாண்டி நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, இவர் என்ன வாட்ச் அணிகிறார் என்பதைப் பார்த்து அதனை விமர்சிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் இவர் எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தால், அடுத்தவர்கள் என்ன உடை உடுத்துகிறார்கள், கண்ணாடி என்ன போடுகிறார்கள், என்ன காரில் வருகிறார்கள் என்பதையெல்லாம் ஆராய்கிறார். தன்னை ஏழைத்தாயின் மகன் என்று தொடர்ந்து கூறிக்கொள்ளும் இவர் இவ்வளவு விலையில் வாட்ச் அணிந்தால் யார் சும்மா விடுவார்கள்.

 

இவரிடம் என்ன கேட்டோம், வாட்ச் வாங்கியுள்ளீர்களே அதற்கான பில்லை கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு இவர் என்ன சொல்கிறார். டீக்கடையில் பேச வேண்டும், வெடிக்கடையில் பேச வேண்டும் என்கிறார். பிறகு ஏப்ரல் முதல் தேதி வெளியிடுகிறேன் என்கிறார். பொருளைக் கொடுத்துவிட்டு பில்லை நான்கு மாதம் கழித்துத்தான் கடைக்காரர் கொடுப்பாரா?  இவர் எதற்காக அவகாசம் கேட்கிறார். இல்லை, பில்லே இனிதான் தயாரிக்க வேண்டுமா? அப்படி இருந்தால் கூட நான்கு மாதம் எதற்காக அவகாசம் கேட்கிறார் என்று தெரியவில்லை. இந்த அரசியல் கோமாளி வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது" என்றார்.

 

 

Next Story

“அது என்னோட பர்ஸ்னல் மேட்டர்... இத அப்படியே விட்ருங்க...” - நைசாக நழுவிய அண்ணாமலை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

annamalai rafale watch controversy

 

“அது என்னோட பர்ஸ்னல் மேட்டர்.. இத அப்படியே விட்ருங்க..” என, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நைசாக பதிலளிக்கும் அண்ணாமலையை, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

 

தமிழக பாஜக கட்சியில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகளால் அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. பாலியல் சர்ச்சைகள் முதல் உட்கட்சி பூசல் வரை என வெளியே வரும் ஏகப்பட்ட புகார்களால் கமலாலயம் கதிகலங்கியுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியுள்ளார்.

 

அண்ணாமலை தன் கையில் கட்டியிருக்கும் வாட்சியின் விலை மட்டுமே சுமார் 4 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. தற்போது இதுதான் அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. போலீஸ் வேலையை ராஜினாமா செய்த அண்ணாமலை, திடீரென அரசியலில் குதித்தார். ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை, வாட்ச் மட்டும் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். வாட்ச் வாங்கவே இவ்வளவு பணம் இருக்கிறது என்றால், அண்ணாமலையிடம்  எவ்வளவு பணம் இருக்கும் என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

 

இது குறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது " என்னுடைய கையில் கட்டியிருக்கும் வாட்சியின் விலை சுமார் 3.5 லட்ச ரூபாய். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு வாட்ச் இது. ரஃபேல் விமானத்தைத் தயாரித்த அதே நிறுவனம்தான் மொத்தம் 500 வாட்ச்களை தயாரித்தது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான் இந்த வாட்சியினைக் கட்டி இருக்கிறேன்" என அண்ணாமலை பேசியிருந்தார்.

 

மேலும், அவர் கூறும்போது "இது என்னோட பர்ஸ்னல் மேட்டர். இத அப்படியே விட்ருங்க" என செய்தியாளரின் கேள்விக்கு நைசாக பதிலளித்தார். ஆனால், இதைப்பார்த்த நெட்டிசன்கள், அண்ணாமலை கையில் இருக்கும் கைக்கடிகாரம், சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது என்ற மற்றொரு தகவலையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது, அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சை குறித்த தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.