தமிழகத்தில் வரும் ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 4, 5 ஆம் தேதிகளில் நடந்த வாக்காளர் முகாமில் 9 லட்சம் பேர் திருத்தம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இணைய தளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும், புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx என்ற இணைய தளத்தை அணுகலாம் (அல்லது) https://www.nvsp.in/ என்ற இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி எளிதாக திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை இதே இணையதளத்தை பயன்படுத்தி எளிதில் அறிந்து கொள்ளலாம்என்பது குறிப்பிடத்தக்கது.