புதுக்கோட்டை மாவட்ட சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் என சுமார் 450 பேருக்கு மேல் உள்ளனர்.இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் மதிய உணவு வழங்கப்பட்டது. மாலையில் செங்கோல், சேதுராமன், உலகநாதன் ஆகியோர் உட்பட மேலும் 3 பேர் என 6 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களை சிறை வாகனம் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சிறையில் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.