Skip to main content

மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருவோருக்கு ஆக்சிஜன் அளிக்கும் தன்னார்வ அமைப்பு..! (படங்கள்)

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாகியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பல இடங்களில் கரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று (06.05.2021) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துவருகிற நிலையில், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அதேபோல் சர்வதேச ஜெயின் வர்த்தக அமைப்பு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 4 வாகனங்களை திருவல்லிகேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிறுத்தியுள்ளது. தீவிர கரோனா தொற்றால் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி கிடைக்கும்வரை, இந்த வாகனத்தில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் ஆக்ஸிஜன்; இஸ்ரோ தந்த தகவல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

ISRO informs that there is oxygen in the moon

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS)  என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

விமான நிலையத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பயணிகளால் திடீர் பரபரப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Passengers diagnosed with corona infection on examine

 

திருச்சி துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஏற்கனவே கரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று கல்லூரியை சேர்ந்த சுமார் 135 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

பரிசோதனையில் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் திருச்சியை சேர்ந்த மருத்துவர் ஒருவரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சியிலிருந்து சார்ஜா விமானம் என்று காலை புறப்பட தயாராக இருந்தது.

 

அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் மருத்துவ சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது கடலூரை சேர்ந்த 43 வயது ஆண் பயணி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 45 வயது ஆண், பெண் இருவருக்கும் கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.