Published on 07/12/2021 | Edited on 07/12/2021

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை வி.கே. சசிகலா சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தாதா சாகேப் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வி.கே. சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான அறிக்கை வெளிட்ட சசிகலா, இன்று (07.12.2021) யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் இல்லம் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.