Skip to main content

'என் பொண்ண அடிச்சு கொன்னுட்டாங்க' - நடிகை சித்ராவின் தாயார் பரபரப்பு பேட்டி!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

vj Chitra mother pressmeet

 

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, நடிகை சித்ரா நேற்று (09/12/2020) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 

இந்த நிலையில், அவரது  உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலையில் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் பிரேதப் பரிசோதனை நடந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து சித்ராவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், உறவினர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

 

vj Chitra mother pressmeet

 

இதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் தயார் விஜயா, ''என் பொண்ணை அடிச்சிருக்காங்க... அடிச்சுதான் செத்துருக்கா. செவ்வாய்க் கிழமை 8 மணிக்கு, கடைசியாகப் பேசினேன். லேட் ஆகும் நானே பேசுறேன்னு சொன்னா... அதான் நான் கடைசியாப் பேசுனது. காலையில அவளோட மாமனார் ஃபோன் பண்ணாரு, சித்ரா மோசம் பண்ணிட்டான்னு சொன்னாரு. என் பொண்ணு என்ன கோழையா? திங்கள் கிழமை மண்டபம் எல்லாம் பார்த்தோம். அவங்களும் வந்தாங்க. எங்க வீட்லையும் நான், என் பொண்ணு, பையன் எல்லாம் போனோம். மண்டபம் பார்த்தோம். ஃபிப்ரவரி 10 -ஆம் தேதின்னு மண்டபம் குறிச்சோம். அம்மான்னு தான் அவரு பேசுவாரு, அத நம்பிதான் என் பொண்ண கொடுத்தேன். அவன் ரவுடின்னு தெரியல, குடிகாரன்னு தெரியல, என்ன ஆச்சுன்னு தெரியல, என் பொண்ண அடிச்சு சாகடிச்சுட்டாங்க'' எனக் கண்ணீருடன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.

Next Story

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்த தாய்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 mother jumped in front of a train with two girls

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அடுத்த வேலம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அறிவழகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு தார்ணிகா(7) ஜெனிஸ்ரீ(5) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலாவுக்கு முன்பே விஜயலட்சுமி என்பவரை அறிவழகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அறிவழகன் – விஜயலட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அறிவழகன். சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கும் முன்பே வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் அறிவழகன்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ விஜயலட்சுமி வேலம் கிராமத்தில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது என் வாழ்க்கை, என் பிள்ளைகள் வாழ்க்கை இப்படியாகிடுச்சே என கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு இன்று காலை கிளம்பினார்.

அவர் கோபத்தில் தனது அம்மா வீட்டுக்குத்தான் செல்வார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். அவர் வாலாஜா ரயில் நிலையத்திற்குச் சென்றவர் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.