vj Chitra mother pressmeet

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, நடிகை சித்ரா நேற்று (09/12/2020) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

இந்த நிலையில், அவரது உடல்பிரேதப் பரிசோதனைக்காகசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,இன்று காலையில் தொடங்கிசுமார் ஒன்றரை மணி நேரம் பிரேதப்பரிசோதனைநடந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து சித்ராவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தற்பொழுது, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்திற்கு இறுதி ஊர்வலமாகஎடுத்துச்செல்லப்படுகிறது. அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், உறவினர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

vj Chitra mother pressmeet

Advertisment

இதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் தயார் விஜயா, ''என் பொண்ணை அடிச்சிருக்காங்க... அடிச்சுதான் செத்துருக்கா. செவ்வாய்க் கிழமை 8 மணிக்கு, கடைசியாகப் பேசினேன். லேட் ஆகும் நானே பேசுறேன்னு சொன்னா... அதான் நான் கடைசியாப் பேசுனது. காலையில அவளோடமாமனார் ஃபோன் பண்ணாரு, சித்ரா மோசம் பண்ணிட்டான்னு சொன்னாரு.என் பொண்ணு என்ன கோழையா? திங்கள் கிழமை மண்டபம் எல்லாம் பார்த்தோம். அவங்களும் வந்தாங்க. எங்க வீட்லையும் நான், என் பொண்ணு, பையன் எல்லாம் போனோம். மண்டபம் பார்த்தோம். ஃபிப்ரவரி 10 -ஆம் தேதின்னு மண்டபம் குறிச்சோம். அம்மான்னு தான் அவரு பேசுவாரு, அத நம்பிதான் என் பொண்ண கொடுத்தேன். அவன் ரவுடின்னு தெரியல, குடிகாரன்னு தெரியல, என்ன ஆச்சுன்னு தெரியல, என் பொண்ண அடிச்சு சாகடிச்சுட்டாங்க'' எனக் கண்ணீருடன் கூறினார்.