Skip to main content

மறைந்தார் 'சின்ன கலைவாணர்' - பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி! (படங்கள் )

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் சூரி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

அதேபோல், ரசிகர்களும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

கடந்த 2009ஆம் ஆண்டு கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை இதுவரை ஐந்து முறை பெற்றுள்ளார். 'உன்னருகே நானிருந்தால்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ளார். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா, சந்தானம், யோகிபாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். 'நான் தான் பாலா', 'வெள்ளைபூக்கள்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 

 

நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

டேனியல் பாலாஜி மறைவு குறித்து சூர்யா வேதனை பதிவு

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
suriya condolence post for daniel balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம்மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதில் அதர்வா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜய் சேதுபதியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில் சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், டேனியல் பாலாஜி மறைவு குறித்து கூறுகையில், “டேனியல் பாலாஜி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. ஒரு ஷாட் சரியாக வருவதற்கு கடுமையாக உழைப்பார். காக்க காக்க படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களின் இனிய நினைவுகள் இன்னும் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.