Skip to main content

பாட்டில் உனக்கு; ஓட்டு எனக்கு!- விருதுநகர் வேட்பாளர் டீல்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

வாக்காளர்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெறுவதற்காக, வேட்பாளர்களில் சிலர் எந்த லெவலுக்கும் இறங்கி விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டம்- துலுக்கபட்டியிலும் நடந்திருக்கிறது.


விருதுநகர் அருகிலுள்ள துலுக்கபட்டியில், 8- வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார், சுயேச்சை வேட்பாளரான பொன்னுப் பாண்டியம்மாள். இவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சங்கர் என்பவர், வாக்காளர்கள் சிலரின் தேவையறிந்து, மது பாட்டில்கள் விநியோகம் செய்துள்ளார்.

virudhunagar local body election independent candidate deal  with peoplesபலவீனமான போதை ஆசாமிகள், மது மயக்கத்தில் பாட்டிலின் மீதுள்ள விசுவாசத்தால், வாக்குகளைப் பொன்னுப் பாண்டியம்மாளுக்குப் போட்டு விடுவார்களோ என்ற சந்தேகத்தில், அதே வார்டில் போட்டியிடும் ஒருவர், தேர்தல் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து விட, வச்சக்காரப்பட்டி  போலீசார் சங்கரைக் கைது செய்து, அவர் வைத்திருந்த 35 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

வாக்குகளை விலை பேசுவதும், தரம் தாழ்ந்து மது விநியோகம் செய்வதும் காலத்தின் கொடுமைதான்!

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கோவையில் திருடர்கள்... விருதுநகரில் விஐபிக்கள்...' - பகீர் கிளப்பும் முகமூடி கொள்ளை கும்பல்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 'We are the owner... we are the thief...'- Club is also a masked bandit

கோவையில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு 4 நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தது தெரிய வந்துள்ளது.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த கும்பல் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை மாநகரில் மட்டும் 18 கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 68 மேற்பட்ட ஹவுஸ் பிரேக்கிங் (வீடு உடைப்பு)  மற்றும் ராபரியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொள்ளையை அரங்கேற்றிய இந்த கும்பல் விருதுநகரில் நான்கு கோடி ரூபாய்க்கு ஸ்பின்னிங் மில் வாங்கி  நடத்தி விஐபிக்களாக  சுற்றிவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக நடைபெற்ற தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கும்பல் பிடிக்கப்பட்டுள்ளது. மூர்த்திக்கு ராட் மேன் என்ற பெயரும் உள்ளதாம். கொள்ளையடிக்க வீட்டின் கதவுகளை உடைக்க ராட் பயன்படுத்தியதால் மூர்த்திக்கு ராட் மேன் என பெயர் வந்துள்ளது என மூர்த்தியை கைது செய்துள்ள ராஜபாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  மேலும் பலரைத்  தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

நிலத்தை அளக்க லஞ்சம்; விஏஓ உள்ளிட்ட இருவர் கைது

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Bribery to measure land; Two persons including VAO were arrested

விருதுநகரில் நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் வாங்கியதாக விஏஓ மற்றும் உடந்தையாக இருந்த நபர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் உள்ள நிலத்தை அளக்க வேண்டும் என நக்கீரன் என்பவர் தி. கடம்பன்குளம் விஏஓ செல்வராஜை நாடியுள்ளார். ஆனால் நிலத்தை அளந்து கொடுக்க விஏஓ செல்வராஜ் 25 ஆயிரம் ரூபாய்  லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நக்கீரன் புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நக்கீரனிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், லுங்கி, வேட்டி உள்ளிட்ட சாதாரண உடைகளில் ஆங்காங்கே பொதுமக்கள் நிற்பதுபோல மறைந்திருந்து நோட்டமிட்டனர். அப்பொழுது 25 ரூபாய் லஞ்சம் வாங்கும் முயன்ற விஏஓ செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர். அதேபோல் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த மோகன் தாஸ் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.