Virudhunagar dt sathur near guganparai factory incident 

விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில் இன்று (19.09.2024) காலை வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதில் குருமூர்த்தி என்பவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய சிக்கிய சிலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.