/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-arrest-art_21.jpg)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கார்த்திக் பாண்டி (வயது 24). இவர் சிவகாசியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னையா என்பவரது மகள் நந்தினியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள், இருவரும் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு வசித்து வந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் கார்த்திக் பாண்டி, அவரது மனைவியின் அண்ணன்களான பாலமுருகன், தனபாலன் மற்றும் இவர்களின் நண்பரான சிவா ஆகிய மூவரால் நேற்று (24.07.2024) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை இன்று (25.07.2024) போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்துகொண்ட பெண்ணின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் ஆகிய இருவரும், அவர்களது நண்பர் சிவா உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)