VIRUDHUNAGAR DISTRICT CRACKER PLANT INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில், அய்யனார் என்பவருக்குச் சொந்தமான டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற சிவசக்தி பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. வழக்கம்போல், இன்று (31/07/2021) காலை தீபாவளி பண்டிகை ஆர்டருக்கான பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்தன.

அப்போதுமருந்துக் கலவை அறையில், உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு கட்டடம் தரைமட்டமானது. அந்த அறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தராஜ் என்ற 60 வயது தொழிலாளி, உடல் சிதறி பலியானார். அவரது உடல் தூக்கி வீசப்பட்டு மரக்கிளையில் தொங்கியது. அந்த உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், தனி தாசில்தார் சிவஜோதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.