
சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் வைரலானவர் நரிக்குறவர் இன பெண்ணான அஸ்வினி. 'சாப்பிடும் இடங்களில் தங்களுக்கு சம உரிமை கிடைப்பதில்லை' என அவர் பேசிய வீடியோ காட்சி வைரலானதைத் தொடர்ந்து அவரது கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதனைத் தொடர்ந்து அஸ்வினி மீது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரின் மனைவி நதியா என்பவருக்கும் அஸ்வினிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் நதியாவிற்கும், அஸ்வினிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது ஆத்திரமடைந்த அஸ்வினி கையில் வைத்திருந்த பேனா கத்தியால் நதியாவை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நதியா கொடுத்த புகார் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினியைக் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.