Published on 17/01/2020 | Edited on 17/01/2020
விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை புதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் அய்யனார், முதல் நிலை காவலர் அய்யனார் ஆகியோர் அருங்குறிக்கை புதூர் ஏரியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏரியில் கள்ளத்தனமாக சாராய வியாபாரம் செய்து கொண்டிருந்த அருங்குறிக்கை புதூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த எழுமலை மகன் செல்வத்தை(47) காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மூட்டைகளாக கட்டப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராயத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.